நடன ஆசிரியரானார் லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் தற்போது குழந்தைகளுக்கு நடன வகுப்பு நடத்தி வருகிறார். இவர் கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் போன்ற படங்களில் ஏற்கனவே நடித்து இரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் என வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையான லட்சுமி மேனன் சிலகாலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவர் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படிச்சேன். என் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது வி‌ஷயங்களைக் கற்றுக்கொண்டுதான் இருப்பேன். வீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு நடன வகுப்பு நடத்துகிறேன்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
என்னுடைய மாணவர்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சியை பார்க்க ஆசைப்படுகிறேன். நிறைய கதைகள் வந்தன. ஆனால், எந்தக் கதையும் எனக்குப் பிடித்த மாதிரி இல்லை. ஏதோ கதைகள் வருகின்றன ஆகவே படம் நடிக்கலாம் என நினைக்கிற ஹீரோயின் நான் இல்லை. சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கிறது உண்மைதான். கொஞ்சம் இடைவெளி எடுத்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Ananya