ஜோதிகாவின் அடுத்த அதிரடி

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகப் பார்த்து தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.
கல்யாண் இயக்கத்தில் உருவான ஜோதிகாவின் ஜாக்பாட் படம் கடந்த வாரம் வெளியானது. இதற்கு முன்னதாக, கடந்த மாதம் ராட்சசி படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக புதுமுக இயக்குநர் ஜெ.ஜெ.ப்ரடரிக்கின் ”பொன்மகள் வந்தாள்” படத்திலும், கார்த்தியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஏற்கனவே விவசாயப் பிரச்னையை மையமாக வைத்து கத்துக்குட்டி என்ற படத்தை எடுத்த இரா.சரவணன் இயக்கும் புது படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கிராமத்து பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் சூரியும் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: Ananya