நயனுக்கு வந்த சோதனை

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. எத்தனையோ வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் நயன்தாரவின் எந்தப் படமும்  இந்தப் படம்போல்  தள்ளிப் போனதில்லை.
 ‘கொலையுதிர் காலம்’ படத்துக்குத்தான் இந்த நிலை வந்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் மாறி மாறி திகதி அறிவிக்கப்பட்டு 7 முறை தள்ளி வைக்கப்பட்ட ‘கொலையுதிர் காலம்’ படத்தின் வெளியீடு 8 ஆவது முறையாக நேற்றும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இம் முறை படம் எப்படியும் வந்துவிடும் என்று சொன்னவர்களை விட, இந்த முறையும் படம் வருவது சந்தேகம்தான் என்று கோலிவுட்டில் சொன்னவர்கள்தான் அதிகமாகி விட்டார்கள்.
இத்தனை முறை தள்ளிப் போன பின்னரும் இப் படம் வெளிவந்தால், அதற்குரிய வரவேற்பும் கிடைத்தால் அது ஆச்சரியம்தான்.

Recommended For You

About the Author: Ananya