கிரான்ட்பாஸ் இரட்டைக் கொலை – மட்டக்குளியில் இருவர் கைது

கொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடம் இருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பாதாள உலக குழு உறுப்பினர் ஆனமாலு ரங்க (39) மற்றும் 22 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.


Recommended For You

About the Author: Ananya