சரசாலையில் கசிப்புக்குகை முற்றுகை!

சாவகச்சேரி – சரசாலை,குருவிக்காடுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குழுவில் சந்தேக நபர் ஒருபரை மதுவரி திணைக்களத்தினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அதே வேளை கசிப்பு அடங்கலான உற்பத்திக்கான பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு அடங்கலாக கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை காலத்தில், மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் பல நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளமை சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய உதவி மது வரி ஆணையாளர் க.தர்மசீலனின் அறிவுறுத்தலுக்கு அமைய, மது வரி அத்தியட்சகர் ரி.தங்கராசா, சாவகச்சேரி மதுவரி அதிகாரி த.அசோகரத்தினம் ஆகியோரின் வழி நடத்தலில் குறித்த சுற்றிவளைப்பை சாவகச்சேரி மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர்.
குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறியிடத்தக்கது.

Recommended For You

About the Author: ஈழவன்