போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முற்பட்ட மாங்குள பெண் கைது!

பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட போலி ஆவணங்களை சமர்ப்பித்து கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்றைய தினம் (18) அதிகாலை கட்டார் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணிக்க  கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.
அவற்றை அதிகாரிகள் பரிசோதித்த போது , அவை போலியான ஆவணங்கள் என்பதனை கண்டறிந்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் சமர்ப்பித்த ஆவணங்களில் பி.சி.ஆர் பரிசோதனை ஆவணமும் போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்