யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (15) யாழ்ப்பாணம் – மருதடி ஒழுங்கையில் அமைந்துள்ள யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் பா.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இந்திய தேசியக் கொடியினை யாழ் இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் ஏற்றிவைத்தார்.

கொடிக்கீதம் இசைக்கப்பட்டமையினைத் தொடர்ந்து இந்திய நாட்டின் ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட சுதந்திர தின வாழ்த்து அறிக்கையும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya