நடிகை கரீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு

இராமாயண கதையை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் படமாக எடுப்பதற்கு படக்குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீதை வேடத்துக்கு பல நடிகைகள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை, படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகை கரீனா, சீதையாக நடிப்பதற்கு 12 கோடி ரூபாய் சம்பளத்தை கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் நடிகை கரீனா கபூரை தேர்வு செய்வதா அல்லது வேறு நடிகையை தேர்வு செய்வதா என்பது குறித்து படக்குழுவினர் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே சீதை வேடத்தில் கரீனா கபூரை நடிக்க வைக்க வேண்டாமென ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

நடிகை கரீனா கபூர் இந்த வேடத்தில் நடிப்பதற்கு ஏற்றவர் அல்ல. ஆகவே அவரை புறக்கணிக்க வேண்டுமெனவும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த கதாபாத்திரத்திற்கு கங்கனா அல்லது யாமி கவுதமையை நடிக்க வாய்ப்பு வழங்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்