‘டெடி’ இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது- ஆர்யா

நடிகை ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘டெடி’ படம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரது மனதையும் கவர்ந்திருந்தது.

குறித்த படத்தை சக்தி சவுந்தரராஜன் இயக்கி இருந்ததுடன், டி.இமான் இசையமைத்து இருந்தார்.

மேலும் ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்

இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

டெடி இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளை இயக்குனர் சக்தி சவுந்தரராஜன்,  ஆரம்பித்துள்ளதாகவும் அப்படத்தில் நடிப்பதற்கும் ஆர்வமாக இருப்பதாகவும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்