நேட்டோவுக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது!

நேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனா, அதன் அணு ஆயுதங்களை விரைவாக விரிவுபடுத்தி வருகின்றது. ரஷ்யாவுடன் இராணுவ ரீதியாக ஒத்துழைத்து வருகின்றது.

அத்துடன், இராணுவ மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் சீனா நேட்டோவுடன் நெருங்கி வருகிறது. ஆனால் கூட்டணி சீனாவுடன் புதிய பனிப்போரை விரும்பவில்லை’ என கூறினார்.

நேட்டோ 30 ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒரு சக்திவாய்ந்த அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி. கம்யூனிச விரிவாக்க அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிறுவப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்