கடலுக்குள் பேருந்துகளை இறங்குவதை கண்டித்து இந்தியாவில் போராட தீர்மானம்!

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெருகிறது.இந்த மீன்பிடி தடை காலத்தை  பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளை மராமத்தி பணி செய்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டு  கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் தங்களது படகுகளை மராமத்துப் பணி செய்யாததால் மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மராமத்தது பணி செய்து விட்டு வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர்  மீன் பிடிக்க கடலுக்கு செல்லாம் என முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவர்கள்  அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான  கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு  சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.
பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை  இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
அதேபோல் நாளுக்கு நாள் உயர்ந்து டீசல் விலையால்  கமீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே மத்திய, மாநில அரசுகள்; கலால்,சாலை வரிகளை  நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் புதன்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்