பிரபலமான அமெரிக்க நடிகை சடலமாக கண்டெடுப்பு

பிரபலமான அமெரிக்க நடிகை டகோடா ஸ்கை, அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்,வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தீவிர விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நடிகை டகோடா ஸ்கை, போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தார் என்றும் கொரோனா தொற்றின் காரணமாக அவரது தாத்தாவும் பாட்டியும் உயிரிழந்தமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பொலிஸாரினால் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால், நிர்மாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்