பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பெண்கள்!

ரக்சா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண்கள் ராக்கி கட்டினர்.

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ரக்சா பந்தன் தினத்தில் பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்களுக்கும், தாங்கள் சகோதரர்களாக கருதுபவர்களுக்கும் ராக்கி கட்டி மகிழ்வர்.

அந்த வகையில் ரக்சா பந்தன் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து மதங்களையும் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், மாற்றுத்திறனாளி பெண்கள், சிறப்பு குழந்தைகள் மற்றும் பல துறைகளை சேர்ந்த பெண்கள் ராக்கி கட்டினர்.

அப்போது சிலர் பரிசுகளையும், வாழ்த்து அட்டைகளையும் பிரதமர் மோடிக்கு வழங்கினர்.


Recommended For You

About the Author: Editor