அரச பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை – விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

அரச சேவையின் பதவி வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பங்களை பொறுப்பேட்கும் இறுதி நாள் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பீ.தயா செனரத்ன அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைகள் பின்வருமாறு….

1. இலங்கை வெளிநாட்டு சேவையின் மூன்றாம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சை 2020 (2021)

2. நில பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் நிர்வாக சேவைகள் பிரிவின் தரம் III ஆம் வகுப்பு உதவி பணிப்பாளர் (மாவட்ட நில பயன்பாடு) பதவிக்கு வரையறுக்கப்பட்ட போட்டித் பரீட்சை 2018 (2021)

3. வர்த்தக அமைச்சின், வர்த்தக திணைக்களத்தின் நிர்வாக சேவை பிரிவின் மூன்றாம் தரத்தில் வர்த்தக உதவி பணிப்பளார் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சை. – 2021

4. தகுதி அடிப்படையில் மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் மிக உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்கான போட்டித் பரீட்சை 2019 (2020)

5. மேலாண்மை சேவை அலுவலர் சேவையின் மிக உயர்ந்த தரத்திற்கு பதவி உயர்வுக்கான வரையறுக்கப்பட்ட போட்டித் பரீட்சை 2019 (2020)


Recommended For You

About the Author: ஈழவன்