சர்வதேச மலர் திருவிழா!

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் சர்வதேச மலர் திருவிழா வண்ணமயமாகத் தொடங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரஸ்ஸல்ஸின் பிரம்மாண்ட அரண்மனையான சிட்டி ஹாலில் மலர் திருவிழா நடத்தப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று தொடங்கிய மலர் திருவிழா 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. “மலர் உணர்வுகளின் ஓர் உலகம்” என்ற தலைப்பின் கீழ் இந்த ஆண்டு நடைபெறும் மலர் திருவிழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 30 மலர் அலங்காரக் கலைஞர்கள் வந்துள்ளனர்.

சுமார் ஒரு லட்சம் பூக்கள் பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் அரண்மனையை அலங்கரித்துள்ளன. முக்கிய சிலைகளும் மலரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யாழ் போன்ற கல்லால் ஆன இசைக்கருவியையும் மலர் அலங்காரக் கலைஞர்கள் விட்டு வைக்கவில்லை.

கண்ணுக்கு குளுமை தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அழகிய மலர்கொத்துக்களின் தொகுப்புக்களையும், மலர் அலங்காரத்துடன் கூடிய கட்டிடக் கலையின் அழகையும் ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor