சீனாவில் 15 யானைகளின் சுற்றுலா – 500 கிலோ மீற்றரை கடந்தும் தொடர்கிறது

சீனாவில் 15 யானைகளின் சுற்றுலா பயணம் தொடர்கிறது. இவர்களை கண்காணிக்க விசேட குழு
மக்கள் கொரோனாவால் சுற்றுலா பயணங்கள் இன்றி இருக்க சீனாவில் 15 யானைகள் ஜாலியாக சுற்றித் திரியும் சம்பவம் சீனாவில் ரெண்டிங் ஆகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இந்த யானைகளின் பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எங்கே இவை போகின்றன என பொலிஸாரும் அதிகாரிகள் டோர்ன் கமரா மூலம் கண்காணித்துவருகின்றனர்.
தெற்கு சீனாவில் நவம்பரில் யுன்னான் (Yunnan provence) இருந்து கிளம்பி குன்மிங் பிராந்தியத்துக்கு (Kunming) ஏப்ரல் மாதம் வந்துள்ளது. சுமார் 310 மைல்கள் (500 கிலோமீற்றகள்) பயணம் செய்துள்ளது.
இதில் 16 யானைகள் ஆரம்பத்தில் பயணத்தை ஆரம்பித்தன. எனினும் ஒரு யானைக்கு இடையில் குட்டி பிறந்ததால் சில நாட்கள் குட்டி ஈன்ற யானையுடன் காட்டில் இருந்துவிட்டு தனது பயணத்தை குட்டி ஈன்ற யானைவிட்டு 15 யானைகள் தனது பயணத்தை ஏப்ரல் 16 இல் ஆரம்பித்தன. இதில் ஆறு பெண் யானைகள், மூன்று ஆண் யானைகள், மூன்று குட்டி யானைகள், மூன்று களிறுகள் என 15 யானைகள்கொண்ட குழு அபூர்வ பயணத்தை தொடர்கின்றன.
இந்த 15 யானைகளும் தனது சொந்த மாகாணத்தில் இருக்கும் அதன் சொந்த வாழ்விடத்திலிருந்து சுமார் 310 மைல்கள் (500 கிலோமீட்டர்கள்) வந்தபோது உணவுகளுக்காக அங்கிருந்த பயிர்நிலங்களை நாசம் செய்துள்ளன. இதனால் 6 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இவை நகரங்கள் வீதிகளில் ஜாலியாக சுற்றித்திரிகின்றன.
யானைகள் இப்படி உலவுவதால் குன்மிங்கில் கிட்டத்தட்ட ஊரடங்கு காலம் போல வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர் யானைகள் சுற்றித்திரியும் பகுதியில் இருக்கும் மக்களது வீட்டிற்குள் தும்பிக்கையை விட்டு உணவுப்பொருள்களை எடுத்து உண்கின்றன. மேலும் யானைகளை துன்பப்படுத்தகூடாது என்ற சட்டம் சீனாவில் உள்ளது. யானைகள் பெரும்பாலும் பிரதான வீதிகளில் பயணிக்கின்றன ஒரு சில நேரங்களில் மட்டுமே உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. இதை தடுப்பதற்காக ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே பெரிய தொட்டியில் யானைகளுக்கு பிடித்த உணவுகளான மக்கா சோளம், அன்னாசிப்பழம், பழவகைகளையும், தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரும் வைத்துள்ளனர்.
அத்துடன் விவசாய விளைபொருள்கள் எதையும் யானைகள் கண்ணில்படும்படி வைக்க வேணடாம் என மக்கள் அறிவுறுத்தப்படடுள்ளனர். இந்த யானைகள் மக்களுக்கு எந்த உயிர்சேதத்தையோ வீதிகளில் பொருட்களுக்கோ சேதம் ஏற்படுத்தவில்லை.. பொலிஸாரும் 400க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களும் இந்த கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதுடன் 15 யானைகளையும் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர்.
இவ்வாறு நீண்ட பயணம் செய்யும் யானைகள் ஒன்றாக உறங்கும் புகைப்படங்களும் வௌியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த 15 யானைகளும் அடுத்து எங்கே போகும் என்பது அதிகாரிகளால் கூடமுடியவில்லை.
எனினும் இந்த யானைக்கூட்டம் இப்படி வௌியில் வர காரணமாக விவசாயத்துக்காக காடுகள் அழிப்பே என கூறப்பட்டுள்ளது. அதன் சொந்த வாழ்விடத்தில் இருக்கும் மழைக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருகிறது என்கின்றனர் சீனாவின் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஏற்கெனவே சீனாவில் இந்த ஆசிய யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில்தான் இருக்கின்றன. சுமார் 300 யானைகள்தான் யுன்னான் மாகாணத்தில் தற்போது வாழ்ந்துவருகின்றன. இதனால் ஒன்றாக இருந்த பல யானைக் கூட்டங்களும் ஆங்காங்கே பிரிந்து தனித்துவிடப்பட்டிருக்கின்றன.
இதனால் மனிதனுக்கும் யானைக்குமான மோதல் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதைத் தடுப்பதற்காகச் சிறப்புக் குழுக்களை நியமித்து யானைகளைக் கண்காணித்து வருகிறது சீன அரசு.

Recommended For You

About the Author: ஈழவன்