ஜனநாயக வாய்ப்பை புறக்கணிக்கோம் – திலகராஜ்!!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க கிடைத்துள்ள ஜனநாயக வாய்ப்பினை பயன்படுத்துவோமே தவிர, அந்த வாய்ப்பினை புறக்கணிக்க தயாரில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை நேற்று (புதன்கிழமை) சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் எந்த தேர்தலையும் பகிஷ்கரிப்பதாக இல்லை. இலங்கையில் தேர்தல்களை பகிஷ்கரித்த நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.

அவ்வாறான பகிஷ்கரிப்புகள் பின்னாளில் நாங்கள் செய்த தவறுகள் என்று ஒப்புக்கொண்ட சம்பவங்களும் உள்ளன.

மலையக மக்களை பொறுத்தவரையில் இந்த நாட்டில் பறிக்கப்பட்டிருந்த வாக்குரிமை காரணமாக நாங்கள் அதிகளவில் இழந்துள்ளோம்.

கிடைத்துள்ள வாக்குரிமையினை பயன்படுத்தி எந்தளவு தூரம் எங்களுக்கு சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தலாம் என்று பார்க்கலாமே தவிர அந்த ஜனநாயக வாய்ப்பினை புறக்கணிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor