5 வழக்கு தொடர்பில் அதிரடி உத்தரவு!

சர்ச்சைக்குரிய திருகோணமலை மாணவர் கொலை , தாஜூதீன் கொலை உள்ளிட்ட5 முக்கிய வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிப்பதை உறுதி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் வாசிம் தாஜூதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, திருகோணமலையில் 11 மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டது, கீத் நோயர் கடத்தல், மூதூர் அக்சன் பாம் தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொலை என்பன தொடர்பில் உடன் விசாரணை முடிக்கப்படுவதை உறுதி செய்ய சட்டமா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் சட்டத்திற்குட்பட்டு உடனடியாக செயற்படுமாறும் சட்டமா அதிபர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor