நல்லூர் மஞ்சம்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான இன்றைய தினம் திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது.
மாலை நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி , தெய்வானையுடன் உள்வீதியுலா வந்த முத்துக்குமார சுவாமி மாலை 6 மணிக்கு  திருமஞ்சத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
இன்றைய மஞ்ச திருவிழாவில் பல்நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, முருக பெருமானின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.

Recommended For You

About the Author: ஈழவன்