மனைவியை கொலை செய்த கணவனின் நிலை

ஆணமடுவ பகுதியில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 8 ஆம் திகதி ஆணமடுவ – நம்பேடேவ பகுதியில் பெண்ணொருவர் அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சினையின் காரணமாக  37 வயதுடைய தனது மனைவியை கூரிய ஆதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த சந்தேக நபர். இன்று ஆணமடுவ – தம்மென்னாவ குளத்தின் அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Ananya