அமெரிக்க விமானத்தில் அப்பிள் மடிக்கணனி கொண்டு செல்ல தடை

அமெரிக்காவில் இயங்கிவரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் அப்பிள் நிறுவனத்தின் சில மடிக்கணினிகள் தெரிவிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்கலத்தில் (batteries) தீ ஆபத்து இருப்பதை அப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் தெரிவுகளில் திரும்பப் பெறப்பட்ட மின்கலங்கள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும்,  இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை நான்கு விமான நிறுவனங்கள் அப்பிள் மடிக்கணினிகள் தெரிவவுகளை கொண்டு செல்ல தடை விதித்துள்ளன.

கடந்த 2015 முதல் பெப்ரவரி 2017 வரை விற்பனை செய்யப்பட்ட 15 அங்குல ஆப்பிள் மேக்புக் ப்ரோ மடிக்கணினிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் அப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 15 அங்குல மேக்புக் ப்ரோ யூனிட்களில் பழுதடைந்த மின்கலங்கள் இருக்கலாம் என தெரிவித்திருந்தது. இதனை பயன்படுத்தும் போது மடிக்கணினிகள் அதிக வெப்பம் மற்றும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அப்பிள் தெரிவித்தது.

பழுதடைந்த மடிக்கணினித் தெரிவுகள் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் அப்பிள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்