11 மாணவர்கள் கொலை வழக்கு உள்ளிட்டவற்றை துரிதப்படுத்த பணிப்பு

11 இளைஞர்கள் கடத்தல் உட்பட ஊடகவியலாளர் மற்றும் வசீம் தாயுதீன் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, பிரபல றக்பி வீரர் வசீம் தாயுதீன், மூதூரில் 17 பேர் படுகொலை, ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட 5 வழக்குகளின் விசாரணைகள் தொடர்பாகவே அவர் இந்த கோரிக்கைகை விடுத்துள்ளார்.

குறித்த வழக்குகளின் விசாரணைகள் விரைவாக நிறைவடைவதனை உறுதிசெய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்னவிற்கு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டத்தினை கண்டிப்பாக பின்பற்றவும்  தமக்கு பூரண அறிக்கையினை சமர்ப்பிக்கவும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்