உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வீழ்ச்சிகண்டுள்ளது.

நேற்றைய தினத்துடன் (புதன்கிழமை) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை ஒரு வீதத்தால் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், உலக சந்தையில் தங்கம் அவுன்ஸின் விலை 1,523 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஏனைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை மற்றும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக பொருளியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor