சூரிய சக்தியில் இயங்கும் வடபகுதி புகையிரத நிலையங்கள்!

வடக்கு புகையிரத பாதையிலுள்ள புகையிரத நிலையங்கள் அனைத்தும் இந்த வாரத்திலிருந்து சூரிய சக்தியில் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை புகையிரத தினைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக வடபகுதி புகையிரத நிலைய கூரைகளில் இலங்கை மின்சாரசபையின் மூலம் சூரிய மின்சக்திக்கான தகடுகள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த நிலையங்களின் மின்சார கட்டணத்தை இலங்கை மின்சார சபை எட்டு வருடங்களிற்கு செலுத்தும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஏனைய புகையிரத மார்க்கங்களையும் சூரிய மின்சக்தியில் இயங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் புகையிரத தினைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor