கிரேக்கத்தை அச்சுறுத்தும் காட்டுத் தீ!📷

கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிரேக்க தீவான ஈவியாவில் கடந்த செவ்வாய்கிழமை முதல் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியினை அண்மித்திருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தீயிணைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 75 தீயணைப்பு வாகனங்களும், ஒன்பது ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏழு விமானங்களுடன் 200 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் அரசாங்கங்கள் காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு உதவும் வகையில் தண்ணீர் பீச்சியடிக்கும் விமானங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த காட்டுத் தீ காரணமாக கிரேக்க தீவான ஈவியாவினை அண்மித்த பகுதி புகை மூட்டமாக காட்சியளிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor