பயணத்தடை நாளை நீக்கம்; இரவுகளில் அமுலுக்கு வரும்!

நாட்டில் விதிக்கப்பட்ட பயணத் தடை நாளை அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படும் என்று இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அத்துடன் நாளை இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையான பயணத் தடை நடைமுறை மே 31ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயணத் தடைகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் நாட்டின் மக்கள் அளித்த ஆதரவுக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.பயணத் தடைகள் நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை வழங்கிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றினால் அடுத்த 2-3 வாரங்களில் கோரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வீட்டு சிகிச்சை குறித்த தொடர் வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்