சம்பந்தக் கலப்பில் கூழ் அருந்தியவர்கள் தனிமைப்படுத்தலில்!

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் இருந்த வேளை திருமணத்திற்கு முன்னரான சம்பந்த கலப்பு நிகழ்வில் , கூழ் காய்ச்சி குடித்த மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ன்ஹா 09 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியிலையே இச்சம்பவம் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீடொன்றில் நிகழ்வு ஒன்று நடைபெறுவதாக சுகாதார பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சுகாதார பிரிவினர் சென்ற போது , அங்கு சம்பந்த கலப்பு நிகழ்வு நடைபெற்றதாகவும்  அதற்காக கூழ் காய்ச்சி அனைவரும் அருந்தியதாகவும் மணமக்கள் வீட்டார் தெரிவித்துள்னர்.
அதனை அடுத்து மூன்று குடும்பங்களை சேர்ந்த 09 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வீட்டில் இரன்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்று கூழ் அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்