நாளை இரவு 11 மணிமுதல் திங்கள் அதிகாலை 4மணி வரை பயண தடை!

நாடுமுழுவதும் நாளை வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த சாதாரண ஊரடங்கு (similar to a curfew) உத்தரவு காலத்தில் எவரும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தப் பயணத்தடையின் போது உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்