கொரோனோவால் உயிரிழந்தவரின் இறுதி கிரிகைகள் செய்தவர்களில் 21 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை சுகாதார அறிவுறுத்தல்கள் , விதிமுறைகளை மீறி சடலத்தை கையாண்ட 21பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசே பொறுப்பேற்று தகனம் செய்து வந்த நிலையில் , சடலத்தை தாமே தகனம் செய்ய போவதாக உறவினர்கள் அதிகாரிகளிடம் கூறி சடலத்தை பெறுப்பேற்றனர்.
அதன் போது சடலம் உரிய முறையில் பிளாஸ்ரிக் கவர்கள் இடப்பட்டு , கடுமையான சுகாதார அறிவுறுத்தல்களை  வழங்கி அதிகாரிகள் சடலத்தை கையளித்தனர்.
இறந்தவரின் உடலை அவரது கிராமத்திற்கு கொண்டு சென்ற உறவினர்கள் அங்கு, சடலத்தை பிளாஸ்ரிக் கவரில் இருந்து எடுத்து , பெரியளவில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து சடலத்தை தகனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இறுதி கிரியைகளில் சடலத்தை தொட்டு , கையாண்ட பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்