தீயில் கருகிய நிலையில் சடலம்

நிட்டம்புவ, கஹடஓவிட பிரதேசத்தில்  சந்தேகத்திற்கிடமான முறையில் தீயில் கருகி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

46 வயதுடைய நிட்டம்புவ, கஹடஓவிட பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் தீப்பந்தம் ஒன்றும் மண்ணெண்ணெய் அடங்கிய போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுது்து பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் வதுபிடிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , நிட்டம்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Ananya