புதையல் தோண்டிய 4 பேர் கைது

பொலன்னறுவை உடவெல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட விசேட சுற்றிவளைப்பு பிரிவு மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , புதையல் தோண்டுவதற்காக  பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி சந்தேகநபர்கள் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Ananya