வவுனியா கூமாங்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தில் விசமிகள் அட்டகாசம் :

வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஓன்றில் திருட்டு இடம்பெற்றுள்ளதுடன் விசமத்தனமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஓன்றின் களஞ்சிய சாலைக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த ஓலிபெருக்கி, பணம், தேவலாயத்திற்குரிய பொருட்களை திருடிச் சென்றுள்ளதுடன், தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாட்டு தேவைக்காக வைக்கப்பட்டிருந்த கூடையை தீ மூட்டி எரிந்துள்ளனர்.

அத்துடன், அங்கிருந்த வர்ணபூச்சினை எடுத்து சுவர்களில் தகாத வார்த்தைகளால் எழுதியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya