காட்டு யானை எரித்து கொலை

மிக சூட்சுமுமான முறையில் காட்டு யானை ஒன்றை கொலை செய்து அதனை எரித்து , அதன் உடற்பாகங்களை வயல் வெளிக்குள் புதைத்து வைத்திருந்த சம்பவமொன்று திருகோணமலை – ஹொரவ்பொத்தான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹொரவ்பொத்தான – ஓலுவௌ கிராமத்தில் வயல்வெளியொன்றிலே குறித்த யானை புதைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுக்கப்பு திணைக்களத்தினர் இவ்வாறு புதைக்கப்பட்ட யானையின் உற்பாகங்களை தோண்டி எடுத்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட யானையின் உடற்பாகங்களை பரிசோதனை செய்தபோது , குறித்த யானை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாகவும், 30-35 வயதிற்கு இடைப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள யானையின் உடற்பாகங்கள் ஹொரவ்பொத்தான வனவள சரணாலய ஆய்வை மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த யானை பிரதேச வாசிகள் சிலராலே கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Ananya