சென்னையிலிருந்து புத்தளத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குடும்ப பெண் உள்ளிட்ட மூவர் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் வருகை தந்த குடும்ப பெண்ணொருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி சென்னை குப்பம் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் புத்தளம் பகுதி மூவரும் வந்து தங்கியிருந்துள்ளனர்.
புத்தளம் வேப்பமடு பகுதியில் உள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியுள்ளதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டிலிருந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த குடும்ப பெண் மற்றும் அவரது 13 வயது , 4 வயது பிள்ளைகளிடம் பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் மூவருக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்