இன்று 1906 பேருக்கு கொரோனா!

நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றால் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

நேற்றைய தினம் ஆயிரத்து 906 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
கடந்த 7 நாள்களாக நாட்டில் ஆயிரத்து 500 பேருக்கு மேல் கோவிட்-19 நோய்த் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 676 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 98 ஆயிரத்து 209 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 709 பேர் உயிரிழந்துள்ளனர்


Recommended For You

About the Author: ஈழவன்