கிளிநொச்சியில் 8இலட்ச ரூபாய் போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போலி நாணயளத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, எட்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

நாணயத் தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்துச் செல்லப்படுகின்றமை தொடர்பாக பொலிஸ் விசேட பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், போலி நாணயத் தாள்களுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட, சந்தேகநபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்