வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!

வென்னப்புவ பகுதியில் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளது.
வென்னப்புவ – புஜ்ஜம்பொல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மாரவில வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி,.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவரது சடலம் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்