பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு – 42 பேர் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின், கராச்சியில், கடந்த மாதத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது.

பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி, 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பெஷாவர் நகரில், நேற்று(புதன்கிழமை) சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது கொண்டாட்டங்கள் நடந்த மைதானத்தின், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்