தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன்

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வாக்களித்து தீர்ப்பளித்துள்ள நிலையில் ஸ்டாலின் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ள அவர், தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொள்கைவாதிகளின் கூட்டணியாக தோள்கொடுத்த கூட்டணி்த தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கு்ம அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்த்துத் தெரிவித்த அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதல்வர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாழ்த்துத் தெரிவித்த தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் அமையப்போகும் ஆட்சி அனைவரும் சேர்ந்து நடத்தப்போகும் ஆட்சியாகும் எனத் தெரிவித்துள்ள ஸ்டாலின், கழகம் வென்றது இனி தமிழகம் வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்