பயணிகள் விமானத்தின் மீது பறவைகள் மோதியதில் பயணிகள் காயம்

ரஷ்யாவில் பறவைகள் மோதியதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த Ural Airlines விமானம் ஒன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

விமானத்தின் என்ஜின் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறக்கபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் விமானம் தரையிறங்கியது.

இதில், விமானத்தில் பயணித்த 23 பேர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்கு செல்ல இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்