இஸ்ரேலில் நெருப்பு திருவிழா : கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் நெருப்பு திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் நாட்டின் லெக் பி ஓமர் மலைப்பகுதிகளின் கீழ் ஒன்றுகூடும் பாராம்பரிய யூத மக்கள் தீப்பந்தம் ஏந்தி பிராத்தனையில் ஈடுபடுவார்கள்.

இந்த நிகழ்வு கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு  மெரோன் நகரில் கொண்டாடப்பட்டது. பெருமளவானோர் கலந்துகொண்ட இந்த நெருப்பு திருவிழாவில் கூட்ட நெருசலில் சிக்குண்ட 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சம் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்