முப்படைகளின் தலைமை அதிகாரி கனவை நனவாக்கிய மோடி!!

இப்போதைய அரசியல் சாசனப்படி இந்தியக் குடியரசுத் தலைவர்தான் இந்திய ராணுவத்துடைய முப்படைகளின் தலைவராக இருக்கிறார்.
அதேநேரம் குடியரசுத் தலைவர் என்ற பதவி இந்தியாவைப் பொறுத்தவரை ஓர் அலங்கார பதவியாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில்தான் பிரதமர் மோடி இன்று கொடியேற்றி

உரையாற்றுகையில்,

“நமது பாதுகாப்புப் படைகள் நமது பெருமைக்குரியவை. நமது முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக நான் இந்த செங்கோட்டையில் இருந்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறேன்.
இனிமேல் இந்தியா தலைமை ராணுவ அதிகாரி (Chief of Defence Staff) என்ற புதிய பதவியைப் பெறும். இந்த புதிய பதவியின் மூலம் நமது படைகளின் வலிமை இன்னும் அதிகமாகும்” என்று பேசியிருக்கிறார்.
இந்தியாவில் தரைப்படையான ராணுவம், விமானப் படை, கப்பல் படை ஆகிய முப்படைகளுக்கும் தனித்தனியாக தலைமைத் தளபதிகள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த Chief of Defence Staff என்ற பதவிக்கான அவசியம் என்ன என்ற விவாதம் இந்தியா முழுதும் இன்று பிரதமரின் பேச்சை அடுத்து சூடுபிடித்திருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட பதவி!
உலகில் வேறு எங்கும் இது போன்ற பதவி இருக்கிறதா என்று தேடினால், இங்கிலாந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் தனது முப்படைகளின் கூட்டு நடவடிக்கையை பலப்படுத்தும் விதமாக முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் Chief of Defence Staff என்ற புதிய பதவியை உருவாக்கியது. .
https://www.tamilarul.net/
கார்கில் தந்த பாடம்
1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்ற மூன்று நாட்களுக்குப் பின் அதாவது ஜூலை 29 1999 அன்று கார்கில் மறுஆய்வுக் குழு என்ற ஒரு குழுவை அமைத்தது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு.
கார்கில் ஊடுருவலின் போது இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு எதிரிகளின் ஊடுருவலை முறியடித்திருந்தன. ஆனாலும் கார்கில் களம் சில படிப்பினைகளையும் இந்தியாவுக்கு வழங்கியது. அந்த வகையில் முப்படைகளின், பாதுகாப்புத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்காக கார்கில் மறு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு அறிவுரை ஆணையத்தின் தலைவராக இருந்த தமிழத்தின் திருச்சியில் பிறந்த ஐஏஎஸ் அதிகாரி கே.சுப்பிரமணியம் தலைமையில் இந்த குழு உருவாக்கப்பட்டது.
https://www.tamilarul.net/
சுமார் ஐந்து மாதங்கள் ராணுவ அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமர்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்புத்துறை நிபுணர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் ஆலோசித்து ஐந்து மாதங்கள் கழித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது இந்த குழு.இந்தக் குழுவின் அறிக்கையை அப்போதைய துணை பிரதமர் எல்.கே. அத்வானி தலைமையிலான அமைச்சரவைக் குழு கூடி விவாதித்தது.
அந்த வகையில் அத்வானி தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் முடிவுதான் முப்படைகளின் ஒருங்கிணைப்பு அதிகாரி எனப்படும், Chief of Defence Staff என்ற பதவியை உருவாக்க வேண்டும் என்பது.
https://www.tamilarul.net/
ராணுவத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடு
ஆனால் அப்போது இந்த Chief of Defence Staff பதவியை வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசால் உருவாக்க முடியவில்லை. இதற்கு இரு காரணங்கள் சொல்லப்பட்டன. அரசியல் ரீதியாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாதது. இன்னொன்று இந்த Chief of Defence Staff பதவியை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்குள்ளேயே எதிர்ப்பும் கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து இந்த புதிய முயற்சியை வாஜ்பாய் அரசு அப்படியே கிடப்பில் போட்டது.
https://www.tamilarul.net/
புதுப்பித்த பாரிக்கர்
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோதே, Chief of Defence Staff உருவாக்க வேண்டும் என்ற கருத்தை புதுப்பித்தார்.
இதை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுக்கு பரிந்துரைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்த புதிய பதவிக்கான செயல் திட்டங்களை வகுக்கும் வேலையில் ஈடுபடும் என்றும் பாரிக்கர் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் இதுபற்றி எவ்வித விவாதங்களும் வெளிப்படையாக நடைபெறவில்லை.
அத்வானி கனவை நனவாக்கிய மோடி
இந்த நிலையில் 2019 இல் பாஜக பெரு வெற்றிபெற்ற நிலையில், Chief of Defence Staff என்ற புதிய பதவியை உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. அத்வானி 1999 ல் நினைத்ததை அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியால் நிறைவேற்ற முடியாத நிலையில் இப்போதைய பெரும்பான்மையை வைத்து 2019 இல் செய்து காட்டியிருக்கிறார் மோடி.
-ஆரா

Recommended For You

About the Author: Editor