மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று!

பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை 3 மணிக்கு காலமானார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் கே.வி.ஆனந்தின் மனைவிக்கும் அவரது மகள்களான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதும், அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் குணமடைந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே கே.வி.ஆனந்துக்குக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனைக்கு தானே கார் ஓட்டி சென்று சிகிச்சை பெற்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.

இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில் இரண்டாவது டோஸுக்காக காத்திருந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்