இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார்.
உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் கே.வி.1994-ல் மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதை பெற்றார்.
அதை தொடர்ந்து தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவளராக பணியாற்றி உள்ளார். இயக்குனர் ஷங்கரின் அபிமான ஒளிப்பதிவளராகவும் கே.வி.ஆனந்த் இருந்துள்ளார். ஷங்கரின் முதல்வன், பாய்ஸ் மற்றும் சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவளராக இருந்துள்ளார்.

அத்துடன் , அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்