மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா!

இலங்கையின் பிரசித்திப் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருநாள் திருப்பலியை இன்று (வியாழக்கிழமை) காலை 6.15 மணியளவில் ஒப்புக்கொடுத்தனர்.

இந்த வருடாந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor