லட்வியா தலைநகரில் உள்ள விடுதி தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடான லட்வியா தலைநகர் ரிகாவில் சட்டவிரோத விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று இடம்பெற்ற இந்த விபத்தின்போது எரியும் கட்டிடத்திலிருந்து குறைந்தது 24 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என நம்பபுவதாக ரிகா நகரின் முதல்வர் அறிவித்துள்ளார்.

பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு அரச கட்டிடத்திற்குள் இருப்பதாகவும், விடுதி ஒன்றாக பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று விடுதி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்