மயிலிட்டியில் வீடு கையளிப்பு.

யாழ்ப்பாணம் மைலிட்டி வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் கையளித்தார்.

மைலிட்டி வடக்கில் 10 இலட்சம் பெறுமதியான 6 வீடுகள் இன்று (வியாழக்கிழமை) பயனாளிகளின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களும்  உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிவர்களுக்குமாக அமைக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் யாழ். மேயர் இ.ஆர்னோல்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் பின்னர் திருநெல்வேலிக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விவசாய திணைக்கள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைத்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்