கோட்டாபாய பற்றிய ரகசியங்களை வெளியிட தயார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்து, அமைச்சர்  ஹர்ஷ டி சில்வா, டுவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவரது ஆவணங்கள் தொடர்பாக பிரச்சினை என்றால், தேவைப்பட்டால் அதனை முன்வைப்போம்.  நீங்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்று கவலைப்படுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்