வல்வெட்டித்துறையில் ஒருவர் மாயம்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நபரொருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் இளங்கோ (வயது 34) என்பவரையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை தீர்த்தக்கரை பகுதியில் நேற்றுமுன் தினம் இரவு 9.30 மணியளவில் அவர் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின் அவரைக் காணவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya