நாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு நாடாளுமன்றிலும் இன்று (புதன்கிழமை) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைத்த சிறப்பு கோரிக்கையை அடுத்து இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டிகளை அணிந்து வருகைத்தந்திருந்தனர்.

அதேநேரம், பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருப்பு நிற ஆடை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்